அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது -
ஊடகவியலாளர் அமீர் - எனக்கு மிகவும் நெருக்கமானவர். நல்ல நண்பர்.
அவரது ஊடக செயற்பாடுகளை நன்கு அவதானித்த வகையில் பக்கச்சார்பற்ற ஒரு ஊடகவியலாளராகவே என்னால் அடையாளப்படுத்த முடிந்தது.
ஊடகவியலாளர் என்பதற்கு அப்பால் - அடுத்தவர்களுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்குபவராகவும் என்னால் - அவரை இனங்காண முடிந்தது.
எனது தேர்தல் காலங்களிலும் சரி - எனது அரசியல் செயற்பாடுகளின் போதும் சரி - சிறந்த ஆலோசனைகளை வழங்குவார். அவரது ஆலோசனைகள் பல - எனது செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்திருக்கின்றன.
ஊடக டிப்ளோமா பெற்றிருக்கும் அமீர் - மேலும் ஊடகத்துறையில் உயர்வுகளை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏ.சி.யஹியாகான்
பிரதிப் பொருளாளர்
முஸ்லிம் காங்கிரஸ்

0 comments :
Post a Comment