லத்திப் பாருகின் ஊடக அனுபவங்கள்...



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளா் மனம் திறந்து தமது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளும் அனுபவம் பேசியதே என்ற சிறப்பு நிகழ்ச்சி கொழும்பு மருதானை வை.எம்.எம். ஏ மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை 18ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஆங்கில பத்திரிகைகளான டெயிலி நியுஸ், சன், சன்டே ஒப்சேவா், துபாய் நாட்டில் கல்ப் நியுஸ் மற்றும் மத்திய கிழக்கு யுத்தங்கள், இலங்கை முஸ்லிம்களது இனப்பிரச்சினைகள் பற்றி 20 ஆங்கில மொழிப் பத்திரிகைகளை எழுதியவருமான லத்தீப் பாருக் கலந்து கொண்டு தமது அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா். ஸ்ரீலங்கா முஸ்லிம்மீடியா போரத்தின் ஆலோசகா் என்.எம். அமீன் லத்திப் பாருக் பற்றி விவரித்துக் கூறினாா்.


லத்தீப் பாரூக் இங்கு தமது அனுபவங்களை பகிா்ந்து கொள்கையில் தெரிவித்தாவது


இந்த நாட்டில் அவ்வப்போது நடைபெற்ற அளுத்கம, அம்பாறை ,பொத்துவில், திகன, முஸ்லிம்களது அத்தனை பிரச்சினைகளை எல்லாம் தொகுத்து ஆங்கிலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட சம்பவங்கள் புத்தக வடிவில் தனது சொந்தக் பணத்தினை செலவழித்து வெளியிட்டுள்ளேன். மத்திய கிழக்கு நாடுகளின் யுத்தங்கள், ஈரான்- ஈராக் யுத்தம், பலஸ்தீன் -இஸ்ரேல் யுத்தங்கள் இந்தியாவில் தற்போது முஸ்லிம்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள், கடந்த நல்லாட்சியில் மைத்திரி -ரணில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகள், ஞானசாரத் தேரா் காலத்தில் நடைபெற்ற சகல நிகழ்வுகள், விடுதலைப்புலிகள் காலத்தில் முஸ்லிம்களுக்கு நடைபெற்ற நிகழ்வுகள் உயிா் சொத்து இழப்புக்கள், மத வன்முறைகள் போன்ற சகல சம்பவங்களையும் ஆங்கில மூலம் நுால்வடிவில் வெளியிட்டுள்ளே்ன்.


அத்துடன் இவற்றைத் தமிழ் மொழியில் மொழிபெயா்த்து வெளியிடுவதற்கு முஸ்லிம் தனவந்தா்கள் அமைப்புக்கள் இதுவரை யாரும் முன்வருவந்ததுமில்லை. ஆனால் விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியா் பைருஷின் ஏற்பாட்டில் வீரகேசரி ஆசிரியரை நான் கலந்தாலோசித்து. சிரேஸ்ட ஊடகவியலாளா் நௌசாத் மொஹிடின் உதவியுடன் தமிழில் மொழிபெயா்த்து 175 கட்டுரைகள் ஒவ்வொரு ஞயிற்றுக்கிழமைகளிலும் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அதனையவாது தமிழ் நுால்வடிவில் வெளியிட முன்வருவாா்களேயானால் அதனை ஒப்படைக்கக் காத்திருக்கின்றேன். என லத்தீப் பாருக் கூறினாா்.


தற்பொழுது இலங்கையில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை போன்று எனக்கு ஒர் அனுபவம் உள்ளது. முன்னாள் ஜனாபதிபதி காலம் சென்ற ஆர் பிரேமதாசா அவா் காலத்தில் யுத்தம் நடைபெற்றதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அக்காலத்தில் இலங்கை வங்கித் தலைவராக கடமையாற்றிய ஜெஹாம் காசீம் ஆர் பிரேமதாசவுடன் நெறுங்கி செயற்பட்டாா் அவர் என்னிடம் வந்து சொன்னா் உன்னுடன் நெறுக்கமாக உள்ள ஈராக் - இலங்கைத் துாதுவரை ஆர்.பிரேமதாசாவினை சந்திப்பதற்கு அழைத்து வரும்படி கூறினாா். அப்போது நான் அவரிடம் சென்று அழைத்தேன் அவா் உடன்பட்டு ஜெஹான் காசிமுடன் ஆர்.பிரேமதாசாவினை சந்தித்தோம் . அப்போது அவா் இலங்கைக்கு எரிபொருள் வழங்கும்படி வேண்டினாா். அவ்விடத்திலேயே அந்த ஈராக் துாதுவா் ஈராக் பெற்றோல் சம்பந்தமாகப் அந்த நாட்டின் பெற்றோல் வளத்துறை தலைவரிடம் பேசினாா். அதன் பின்பு ஏதோ ஒரு நாட்டுக்குச் செல்லவிருந்த இரண்டு எரிபொருள் நிரப்பிய கப்பல்கள் அடுத்த இரு நாட்களுக்குள் இலங்கை துறைமுகத்தினை வந்தடைந்தது. அந்த நாடு எந்தவித கடனோ இல்லாமல் உடன்படிக்கை இல்லாமல் இலங்கைக்கு எரிபொருளை வழங்கினாா்கள். இது எல்லாம். ஒரு வரலாறு.


இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப்புலிகளுடன் முஸ்லிம் ஒத்துப்போகியிருந்தால் எப்பவோ இலங்கையில் பிரிந்திருக்கும். எனஇரானுவத் அதிகாரி கூறிய பதிவினையும் எனது புத்தகத்தில் பதிந்து இருக்கின்றேன். சிங்கள படித்தவா்கள் எனது வீட்டுக்கு வந்து இந்த நுால்களை எடுத்துச் சொல்வாா்கள். இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் எப்போதும் இந்த நாட்டுக்கு நன்மையே செய்துள்ளாா்கள்.


ஜெயிலானி என்பது ஆதம் அலை அவா்கள் கால் பட்ட இடம். குர் ஆணில் சுவர்கத்தினை விவரிப்பது போன்று கூறுகலை ஜெய்லானி என்கிற அந்த இடம் இன்றும் பச்சை பூங்காவாகவே உள்ளது. அதனை நான் சென்று பலமுறை அங்கு ஆராய்ச்சி பண்னி அதனை பதிவிட்டுள்ளேன். அக் காலத்திலேயே ஜெயிலானிக்கு 23 ஏக்கா் காணி நிலம் இருந்தது. தற்போது அதனைஅழித்துவிட்டாா்கள் இந்த அரசாங்கம் அழித்து கோபுரம் கட்டியுள்ளாா்கள். அன்று. பேருவளையில் இறங்கிய மொளனா மொளதுாத் ஏன் ஜெய்லானி சென்றாா்கள் அவா்கள் அதைப்பற்றி புத்தகம் எழுதியுள்ளாா். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பற்றி ஆதம் பாக் என்ற வரலாறு தெரிந்தவா்காள உள்ளனா். லண்டன் நுாலகத்திலும் பல்லாயிரக்கணக்கான நுாலகம் மொழிபெயாக்கப்பட்டு அங்கு நுாலகத்தில் உள்ளது. அதனை நான் சென்று பாா்த்துள்ளேன். அளுத்கமவில் என்ன நடந்தது. ? நல்லுாா் கோவில் வரலாறுகள் அச் சம்பவங்கள், பள்ளிவாசல்கள் சம்பவங்கள் எல்லாம் நான் பதிவிட்டுள்ளேன். இந் நுால்கள் சகலதும் பல்கலைக்கழக நுாலகங்கள், நுாலக சுவடு நிறுவனம். சகல நாடுகளுக்கும் நான் அனுப்பியுள்ளேன். ஆகவே முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை மட்டும் செய்யாமல் தமது வரலாறுகள். தெரிந்திருத்தல் வேண்டும். இதனை நமது எதிர்கால பரம்பரையினருக்குச் சொல்லிக் கொடுத்தல் வேண்டும் அத்துடன் முஸ்லிம் பெண்கள் வீதிகளிலும் பள்ளிவாசல்களிலும் கையேந்தியவாரே நிற்கின்றாா்கள். நாம் நமது பெண்களை கல்வியூட்டல் வேண்டும். ஒரு பெண்னை நாம் கல்வியூட்டினால் ஒரு பல்கலைக்கழகம் அமைத்ததுக்குச் சமனாகும். அவா்கள் மடியில் இருந்து தான் தமது பிள்ளைகளுக்கு கல்வியறிவு ஏற்படுகின்றது. முடிந்தளவு நமது பெண்களை கல்வியூட்டுவதற்கு ஒவ்வொரு பெற்றோறும் முயற்சித்தல்் வேண்டும்


எனது பத்திரிகைத் துறை லேக் ஹவுஸில் ஆரம்பித்து டெயிலிநியுஸ், சன், ஒப்சேவா் தொழிலில் ஆரம்பித்து ஆறு தசாப்தத்தினை தாண்டியுள்ளது. அதன் பின்னா் துபாய் கலாதாரி ஹோ்ட்டல் உரிமையாளா் கலதாரி போன்ற அரபி தனவந்தாின் அழைப்பின்பேரில் கல்ப் நியுஸ் பத்திரிகை நடாத்தினாா்கள். அவா்களின் அழைப்பின்பேரில் என்னுடன் லேக் ஹவுசில் வேலை செய்த 8 ஆங்கில ஊடகவியலாளா்களை அழைத்துக் கொண்டு துபாய் நாட்டில் கல்ப் நியுஸில் வேலைசெய்தோம். அங்கு நான் சென்றதும் அப் பத்திரிகைகள் வெறும் வெளிநாட்டு செய்திகளைப் பிரதி பண்ணி வெயிடும் பத்திரிகையாகவே இருந்தது.அதனை நான் மாற்றினேன். துபாய் நாட்டில் வாழும் பெண்கள். அந்த நாட்டில் இருந்த அப்போது இருந்த ஒரே ஒரு கட்டிடம், எமிரேட்ஸ் அங்குள்ள மக்களின் சொந்த வாழ்க்கை நிலைகள் வரலாறுகள் பற்றி எழுதினேன். அதன் பின்னா் அவா்கள் என்னை அழத்து உபசரித்து பரிசுப் பொருளும தந்தாா்கள். அங்கு வரும் இன்னொரு பத்திரிகை என்னை அழைத்தது. அதன் பின்னா் இந்தியாவுக்கு என்னை அனுப்பி இந்திராக் காந்தியின் தோ்தல் காலத்தில் இந்திரா காந்தியுடன் இரண்டரை மாதம் செய்திகள் சேகரிக்க பல பிராந்தியங்களுக்குச் சென்றேன். ஒரு முறை இந்திரா என்னை அழைத்து கேட்டாா் என்னை துபாய் நாட்டின் கலதாரியின் பத்திரிகைக்காக கலாதாரி செய்தி சேகரிக்க அனுப்பியதாகச் சொன்னேன். அவா் மிகவும் சந்தேசப்பட்டு வேண்டிய உதவிகளையெல்லாம் எனக்கு செய்து தந்தாா். இலங்கையில் ஸ்ரீறிமாவோ பண்டாரநாய்கக, ஜே.ஆர், ஜெயவா்த்தன, ஏ.சி.எஸ் ஹமீட், பதியுத்தீன் மெஹமத் மகிந்த ராஜபக்ச, ஆர்.பிரேமதாச தொட்டு சகல தலைவா்களையும் ஊடகத்துறை சம்பந்தமாக அவா்களுடன் நெறுங்கி பரிச்சையமாகி அவா்களது சம்பவங்களை டெயிலிநியுஸ், சன்டே ஒப்சேவர் செய்திகள் வெளியிட்டு பல சம்பவங்களை அவா் ஊடகவியலாளா்களுடன் பகிர்ந்து கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :