வீட்டுத்தோட்ட பயிர் செய்கையை அனைவரும் முன்னெடுப்பது அவசியமான ஒன்றாகும். பதுளை மாவட்ட அரசாங்க அதிபர்



இரா சுரேஷ்குமார்-
னிவரும் காலங்களில் உணவு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட உள்ளது பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டுத்தோட்ட பயிர் செய்கையை முன்னெடுப்பதன் ஊடாக ஓரளவேனும் உணவு பிரச்சனைக்கு தீர்வு காணலாம் இதற்காக வீட்டுத்தோட்ட பயிர் செய்கையை அனைவரும் முன்னெடுப்பது அவசியமான ஒன்றாகும் என மாவட்ட அரசாங்க அதிபர் பதுளை மாவட்ட செயலகத்தில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கை வேலை திட்டத்தை ஊக்குவிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்

அனைவரும் பயிரிட்டு நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் வீட்டுத்தோட்ட ங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை சுற்றாடல் துறை அமைச்சு அமுல்படுத்தியுள்ளது இவ் வேலைத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்ட செயலகத்தினால் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக மரக்கன்றுகள் விதைகள் ,பயிர்கள் வழங்கப்பட்டு வருகின்றன இவ் வேலைத் திட்டத்தில் இன்றைய தினம் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் முன்னெடுப்பதற்கான முன்னெடுப்பதற்காக அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் ,மரக்கன்றுகள், விதைகள் பயிர்கள் ,இயற்கை உரங்கள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இதில் பதுளை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதுவரையில் பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 55000 வீட்டுத் தோட்ட பயிர் செய்கை அரசின் உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது மேலும் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் வீட்டுத்தோட்ட பயிற்சி ஊக்குவிப்பதற்காக இலவச விதைகள் மற்றும் இயற்கை உரங்கள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் விதை மற்றும் கன்றுகள் மற்றும் இயற்கை உரம் என்பன பெற்றுக்கொடுத்து வீட்டுத்தோட்ட பயிர் செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :