ஓட்டமாவடியில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் (எம்பி) நிதியொதுக்கீட்டில் வாழ்வாதர உதவிகள் வழங்கல்எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களின் நிதியொதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 20.06.2022ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடபெறவுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ஏ.ஏ.நாஸர்,
ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.தஸ்லிம், அமைச்சரின் ஓட்டமாவடி பிரதேச இணைப்பாளர் எம்.காஸிம் மெளலவி, வாழைச்சேனைப் பிரதேச இணைப்பாளர் முஹம்மது ஜவாத் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 8 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 30 இலட்சம் நிதியொதுக்கீட்டில் காலாண்டுக்குரிய வாழ்வாதர உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாடு எதிர் நோக்கியுள்ள இறுக்கமான பொருளாதார சூழலில் குறித்த உதவிகளை வழங்க நிதியொதுக்கீடு செய்த அமைச்சருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :