ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்டத்திற்கு தெரிவாகி சாதனைஎஸ்.அஷ்ரப்கான்-
லுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியினர் மாகாண மட்டத்திற்கு தெரிவாகி சாதனை நிலைநாட்டியுள்ளனர்.

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கிடை யிலான பெருவிளை யாட்டுப் போட்டியான கிரிக்கெட் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலை இறுதிப் போட்டிக்கு தெரிவாகி முதலாமிடத்தைப்பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்த அயராது முயற்சிகளை மேற்கொண்ட உடற்கல்வி ஆசிரியர்களான ஆர்.நெளஸாத், ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஏ.அஸ்மத் ஸஹி, எம்.முனாஸிர் ஆகியோருக்கும் இதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் மற்றும் உதவி அதிபர் எம்.எச்.எம்.நஸீம் ஆகியோருக்கும்
பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :