இந்திய கலைஞர்களுடன் கைகோர்த்த ரெப் சிலோன் இன் 'கனவு தேவதை'றாசிக் நபாயிஸ்-
லங்கையின் முன்னனி யூடியுப் தளங்களில் ஒன்றான 'ரெப் சிலோன்' பல்வேறு வரவேற்கத்தக்க பாடல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இவற்றுள் பல பாடல்கள் இப்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அத்தோடு மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் கடந்துள்ளது.

இதுவரை உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து பயணித்த 'ரெப் சிலோன்' முதன் முறையாக இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கடந்த மார்ச் மாதம் இந்தியா சென்றனர். இதன்படி சூப்பர் சிங்கர் புகழ் மானசியுடன் இணைந்து பணியாற்றிய 'கனவு தேவதை' என்ற பாடலினை கடந்த 10ம் திகதி அன்று தங்கள் யூடியுப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

'கனவு தேவதை' என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு காதல், ஈழத்தின் அழகு,‌ தமிழின் பெருமைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இப்பாடலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிக அழகான முறையில் கூறப்பட்டுள்ளதோடு கர்னாடிக் மெலோடி ரெப் மூன்றையும் ஒரே பாடலில் அடக்கிய வரிகள் இப்பாடலின் தரத்தை எங்கோ கொண்டு செல்கிறது. இப்பாடலுக்கான இசையினை திசோன் விஜயமோகன் மிக மிக அழகான முறையில் கேட்பவர்களுக்கு புல்லரிக்க வைக்கும் அளவிற்கு வழங்கியுள்ளதோடு, வரிகள் மற்றும் ரெப்பினை வாகீசன் இராசையா அனல் பறக்கும் விதமாக எழுதியுள்ளார். மிக இனிமையான தன் குரலில் மானசி பாடி உள்ளதோடு, அட்விக் உதயகுமார் அவர்களின் நடிப்பு இப்பாடலின் தரத்தினை‌ மேலும் வலுவூட்டுகின்றது.

ரெஜி செல்வராசாவின் இயக்கம் மற்றும் ஒளித்தொகுப்பு மிக மிக பிரமாதம்,
ஒக்டபட் பானு அவர்கள் இப்பாடலுக்கு ஒக்டபட் வாசித்திருப்பதுடன், பத்மயன் அவர்கள் இப்பாடலுக்கான ஒலிக்கலவையினை செய்துள்ளார். பாடலுக்கான விளம்பர வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல்களை மதுஸ் ஜே.எம் செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட ஒரு பெரிய படைப்பினை செய்வதற்கு ஊன்று கோலாக இவர்களது தயாரிப்பாளர்கான கனடா தமிழ் பசங்க நிறுவனத்தின் தேனுசன் மற்றும் சிந்துசன் ஆகியோர் கைகோர்த்திருக்கிறார்கள்.
கனவு தேவதைப் பாடல் யூடியுப் தளத்தில் ஆறு நாட்களில் 71000 பார்வையாளர்களை கடந்து தற்போதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :