தனது பிழையான தீர்மானத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்த முன்னாள் விவசாயத்துறை அமைச்சரை நீதியின் முன் நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று( 21) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கொரோனா அனர்த்தம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளை முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினி, களை நாசினிகளையும் தடை செய்து விவசாயத் துறையை அழித்தது மாத்திரமன்றி சிபாரிசு செய்யப் படாத சேதனப் பசளையை ஏற்றிவந்த கப்பலுக்கும் நட்ட ஈடு செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நட்டத்தையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளார்.
விவசாயத் துறை அமைச்சரின் இந்த பிழையான தீர்மானத்தால் நாடும் நாட்டின் பொருளாதாரமும் பாரியளவில் பாதிக்கப்பட்டன என்பதை புதிய அமைச்சரவை நியமனத்தின் போது ஜனாதிபதி உறுதிப் படுத்தியுள்ளார்.
ஆகவே எதிர்காலத்திலும் இவ்வாறான பிழையான செயற்பாடுகள் விவசாயத் துறை அமைச்சிலும் ஏனைய அமைச்சுகளிலும் நடைபெறாமல் பாதுகாக்க முன்னாள் விவசாயத் துறை அமைச்சரை நீதி விசாரணைக்கு உட்படுத்தி அவரால் ஏற்படுத்தப்பட்ட மோசடிகளையும் நட்டங்களையும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment