ஏப்ரல் 25 வரை வீட்டுப்பாவனைக்கான கேஸ் வினியோகிக்க முடியாதுள்ளது என லிட்ரோ கேஸ் நிறுவம் அறிவித்துள்ளது.
நேற்று(20) கேஸ் கொள்கலன் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்திருப்பினும், வீட்டுப்பாவனைக்கு வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வந்துள்ளவற்றை வைத்தியசாலை,தொழிற்சாலை மற்றும் தகனம் போன்ற தேவைகளுக்கு மட்டுமே வழங்க ,உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவத்தினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறுறிருப்பினும் ஏப்ரல் 24 ம் திகதி கேஸ் கொள்கலன்கள் அடங்கிய மற்றுமொரு கப்பல் வருகை தர உள்ளது.இக்கப்பலில் கொண்டுவரப்படும் கேஸ் வீட்டுப்பாவனைக்காக வினியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ கேஸ்நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment