அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள் தமிழ் பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது பொலன்னறுவை அரலகங்வில விலயாய தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
திம்பு/அரல/விலயாய ஆரம்ப பாடசாலையின் முதல்வர் யூ.கே.ஜீ கித் ஸ்ரீ அபேகுணரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் கந்தளாய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக்;, கந்தளாய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சீ.எம்.தௌபீக், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளர் டபிள்யூ.தரங்கனி ரசிகா, பொலன்னறுவை மாவட்ட ஒன்றினைந்ந அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.ஏ.டீ.சுஜீவனி பிடிகல மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அதிதிகளின் சிறப்புரைகள் இடம் பெற்றதுடன், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களினால் கண்கவர் கலை கலாசார நிகழ்வுகள் தமிழ் மொழியில் நிகழ்த்தப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பின் மூலம் ஆசிரியர்கள் தமிழ் மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.எம்.செய்னுதீன்; இப்பாடநெறி நடாத்தப்பட்டதோடு தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், தமிழ் மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளுதல் எனும் நோக்கத்துடனேயே இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment