கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜென்டுக்கு பிணை, உயர்மட்ட வழக்கறிஞர்கள் குழு அவருக்காக முன்னிலை!



நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டின் பிணையை சட்டத்தரணிகள் குழுவொன்று உறுதி செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.  

பின்னர் அவர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார், இந்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடங்கி பின்னர் அவரை கைது செய்தனர்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சார்பில் 12 பேர் கொண்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானனர், அவர்கள் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் சேவைகளை இலவசமாக வழங்கினர்.

தொடர்ந்தும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டுள்ள பல நபர்களுக்காக சட்டத்தரணிகள் இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தி தமது சேவைகளை வழங்கி வருகின்றனர்.

பொலிஸ் சார்ஜென்ட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், ஒருவரின் கருத்தைக் கூறுவது குற்றமல்ல என்றும், அது ஒரு நபரின் அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறினார்.

தற்போதைய நெருக்கடியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இவ்விடயம் தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பது குற்றமாகாது எனவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜெண்டிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :