பெரும்பான்மை சமூகத்தால் முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் புனித நோன்பு இப்தார் நிகழ்வுக்கான ஒழுங்கு
மாற்றம் ஒன்றையே நாடு விரும்புகின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு
எம்.எம்.ஜெஸ்மின்-
நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் நோன்புடன் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு நோன்பு திறக்கும் நேரம் அண்மித்ததும் சுதந்திர சதுக்க கட்டிடத் தொகுதியில் அதான் ஒலிக்கச் செய்து , நோன்பு திறப்பதற்கான இப்தார் நிகழ்வு மட்டும் கூட்டுத் தொழுகைகான சந்தர்ப்பம் என்பனவற்றை சிங்கள சகோதர சகோதரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏனைய சமூகத்தினரின் உணர்வுகளுக்கும் சமய சடங்குகளுக்கும் மதிப்பளித்து இடம்பெற்ற இச் சம்பவத்தால் இன்றுதான் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக சுதந்திர சதுக்கத்தில் வைத்து அனைவரும் கருத்துரைத்தனர்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்பட்டால் நாம் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் வாழ்வதால் நாட்டில் புரையோடிப் போயுள்ள அனைத்து பிரச்சனைகளும் ஒட்டுமொத்தமாக மறைந்து போய்விடும்.
0 comments :
Post a Comment