இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவர் ஹா்சன் சமரசிங்கவின் இணைப்புச் செயலாளார் எனக் கூறிக் கொண்டு ஜெய்சங்கர் தமிழ்ச்சேவையின் நிர்வாகம் ஒலிபரப்புச் சேவையினை முறைகேடான நிர்வாகத்திற்குச் இட்டுச் செல்கின்றாா். என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட பகுதி நேர அறிவிப்பாளா் எம்.எச்.எம் ஜெஸ்மின் இலஞ்ச ஆணைக்குழுவிடம் நேற்று (27) முறைப்பாடை ஒன்றை கையளிததாா்
அதன் பின்னா் ஜெஸ்மின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் -
ஆசியாவில் மிகவும் பிரபல்யம் பெற்ற இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்ச் சேவையை அதன் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், முறையற்ற பகுதி நேர அறிவிப்பாளா் நியமனம் போன்ற விடயங்களில் தலைவரின் இணைப்புச் செயலளாா் ஜெயசங்கா் தலையிட்டு நிர்வாகத்திற்கு பங்கம் விளைவித்து முறைகேடுகளை ஏற்படுத்தி வருகின்றாா். ஏற்கனவே அங்கு தமிழ்ச்சேவையின் பணிப்பாளராக திரு கணபதிப்பிள்ளை என்பவா் பணியாற்றி வந்தாா் கடந்த சில காலங்கலாக அவரது பதவிகள், கடமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
எவ்வித அறிவித்தலும் இன்றி தான் நினைத்தவர்களுக்கு தமிழ்ச்சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளா் சிலரையும் கடந்த மாதம் நியமனம் செய்வதுள்ளாா். அத்துடன் சில நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் முறையான விளம்பர முகாமைத்துவமின்றி விளம்பரக் கட்டணங்கள் நிமிடங்கள் என அறவிடுவதை அவரே சில நிகழ்சிகளுக்கு அனுமதி வழங்குகின்றாா். இதனால் நிதி மோசடிகளும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் இடம்பெறுவதாகவும் திரு ஜெஸ்மின் தெரிவித்தாா். அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் இணைப்புச் செயலாளா் என்ற பதவி வெளியிலிருந்து வரும் ஒருவருக்கு நியமிக்கவில்லை எனவும் நிர்வாகம் கூறுகின்றது. எனவும் தெரிவித்தாா். .
0 comments :
Post a Comment