உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவு ஆராதனை



பாறுக் ஷிஹான்-
2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை மெதடிஸ்ட திருச்சபை வளாகத்தில் வியாழக்கிழமை(21) மாலை இடம்பெற்றது.

இப்பிரார்த்தனையுடனான கவனயீர்ப்பு போராட்டத்தில் குண்டுத்தாக்குதலில் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.
இத்தாக்குதலில் இறந்தவர்களில் நினைவாகவும் உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் இங்கு கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டது.
இதன் போது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் பெரிய கல்லாறு மெதடிஸ்ட திருச்சபையின் அருப்பணி எஸ்.டி வினோத் கல்முனை மெதடிஸ்ட திருச்சபையின் அருட்பணி சுஜிதர் சிவநாயகம் ஆகியோர் இங்கு கருத்துரைகளை வழங்கிய பின்னர் அமைதியாக இக்கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இதன் போது உயிர்த்த ஞாயிறு தினத்தில்இ நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பனவற்றிலும், கொழும்பிலுள்ள சில நட்சத்திர விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கொடூரமான தாக்குதலின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நாளினை அனுஸ்டித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :