வட, கிழக்கு மாகாண வீரர்களுக்கு ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய கராத்தே போட்டியில் கல்குடா - ஓட்டமாவடி சம்மேளன வீரர்கள் 14 பேருக்கு பதக்கங்கள் கிடைத்துள்ளதாக சம்மேளனத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.நவாஸ் தெரிவித்தார்.
திருகோணமலையில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்டுத்திய வீரர்களுக்கும், வழிகாட்டிய ஜப்பான் கராத்தே தோ அமைப்பின் பிராதான பயிற்றுவிப்பாளர் எச்.எம்.விஜயகுமார ஹேரதுக்கும் கல்குடா சம்மேளனத்தின் பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.நவாஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment