புதிய அமைச்சரவை பதவியேற்று 100 மணிநேரத்துக்குள் 3 ஆவது விலை உயர்வு!



ஆர்.சனத்-
'லிற்றோ கேஸ்' விலையை 2, 500 ரூபாவால் அதிகரிக்க அரசு அனுமதி மறுப்பு
சந்தையில் தட்டுப்பாடு மேலும் நீடிக்கும் அபாயம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லிற்றோ சமையல் (12.5 KG ) எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் அறிவித்தாலும், விலை அதிகரிப்புக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.
 
லிற்றோ நிறுவனத்தின் விலை பட்டியலின் அடிப்படையில் 2020 செப்டம்பர் 25 ஆம் திகதிகளவில் (12.5 KG ) சமையல் எரிவாயுவின் அதிகபட்ச சில்லறை விலை ஆயிரத்து 493 ரூபாவாக காணப்பட்டது.
 
5 KG லிற்றோ சமையல் எரிவாயுவின் அதிகூடிய சில்லறை விலையாக 598 ரூபாவும், 2.3 KG எரிவாயுவின் விலை 289 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் 2021 ஒக்டோபர் 10 ஆம் திகதி லிற்றோ சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிக்கப்பட்டது.
12.5 KG சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 257 ரூபாவாலும், 5 KG சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவாலும், 2.3 KG சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.
 
இதன்படி புதிய விலையாக
12.5 KG - 2,7505 KG - 1,1012.3 KG - 520 - நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12. 5 KG சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 750 ரூபாவால் அதிகரிப்பதற்கு லிற்றோ நிறுவனம் தீர்மானத்திருந்தது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.
எனினும், விலை அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது. பழைய விலையில்தான் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
 
சந்தையில் தற்போது சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. உலக சந்தையிலும் விலை உயர்வு என நிறுவனம் கூ கின்றது. எனவே , 2 ஆயிரத்து 500 ரூபாவால் இல்லாவிட்டாலும், விலை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியென நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
'லாப்' நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலை ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் புதிய அமைச்சரவை கடந்த 18 ஆம் திகதி பதவியேற்றது.
 
காஞ்சனா விஜேசேகர, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
 
புதிய அமைச்சரவை பதவியேற்று மறுநாளே சிபேட்கோவின் எரிபொருள் விலையும் அதிகரித்தது. மறுநாள், கோதுமைமா விலை அதிகரிப்பையடுத்து பாண் உட்பட பேக்கரி உணவு பொருட்களின் விலை எகிறியது. தற்போது எரிவாயு விலையை அதிகரிப்பு என்ற அறிவிப்பை லிற்றோ நிறுவனம் விடுத்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :