சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விரளயாட்டுக் கழகத்தின் 40 வருட புர்த்தியனை முன்னிட்டு நடாத்தப்படும் ” Flying horzian’s super smash “ பௌசி ஞாபகார்த்த கிண்ண 20 இற்கு 20 கடினபந்து கிறிக்கட் சுற்றுக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று ( 18 ) மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறுக் முன்னிலையில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் , தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர் அலியார் பைஸர் , கல்முனை மாநகரசபை உப்பினர்களான எம்.ஏ.றபீக், எம்.வை.எம்.ஜௌபர் , என்.எம்.றிஸ்மீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , தாதியர் பாடசாலை பணிப்பாளர் எம்.எம்.எம்.நஜீம் , குளோபல் லொஜிக் சாதர பிரதிநிதி எம்.ஸஹீறுல் ஹக் , ஆர்பிகோ நிறுவன செயற்பாட்டாளர் ஏ.பி.ஜஹான் , சாஸ்கோ போன் சொப் பணிப்பாளர் கே.எம்.சதாத் , சலீம் லேத் எஞ்ஜினியரிங் நிறுவன பணிப்பாளர் ஏ.எம்.சலீம் , லங்கா ரேட் சென்டர் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.ஹைருல் அமான் , குயீன்ஸ் கொம்லெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜே.எம்.பாஸித் மற்றும் எஸ்.எல்.எம்.நௌபர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் சாய்ந்தாமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் களம் இறங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 16.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.எம்.சஜான் தெரிவு செய்யப்பட்டார்.
இவர் 27 பந்துகளுக்கு முகம் கொடுத்து 70 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்து வீச்சில் 4 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தார்.
0 comments :
Post a Comment