எனக்கும் - முஷர்ரபுக்கும் எந்த தொடர்பும் இல்லை! ரிஷாத் பதியுதீன் அதிரடி!!



பூமுதீன்-
எனக்கும் - முஷர்ரப் எம்பிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் - ரிஷாத் பதியுதீன் நேற்று அறிவிப்பு செய்தார்.

கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட முஷர்ரப் எம்பியுடன் - கட்சியின் உண்மையான ஆதரவாளனும் தொடர்பு வைத்திருக்கமாட்டான் என்றும் தலைவர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற போதே மேற்படி கருத்துக்களை - ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
முஷர்ரப் எம்பியுடன் - நான் மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக யாரும் நினைப்பார்களாயின் அது தவறான புரிதல்.

கட்சியின் கொள்கைக்கு மாற்றமாக - பொத்துவில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக , முஷர்ரப் எம்பி யின் செயற்பாடு இருக்கிறது. அவ்வாறான நிலையில் - கட்சியின் தலைவராகிய நான் - அவருடன் கட்சி ரீதியான தொடர்பில் இருப்பதாக நினைப்பது அபத்தமான எண்ணம் .

அம்பாரை மாவட்டத்தில் கட்சி செயற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்து கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் செயற்பாடுகளில் அதீத அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :