கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நீண்ட காலமாக கண் சத்திரசிகிச்சைக்கான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் இல்லாமையினால் பல சிரமங்களை நோயாளிகள் எதிர்நோக்கினர்.
இதனை கருத்தில் கொண்டு கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர். என் . நிரோஷனின் வேண்டுகோளுக்கிணங்க வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா.முரளீஸ்வரனின் முயற்சியின் பயனாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பிலிருந்து 25 இலட்சம் பெறுமதியான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் அனைத்துலக மருத்துவநல அமைப்பு( ( அமெரிக்கா) சார்பாக இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர். அருள்நிதி அவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா.முரளீஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் இவ் ” அனைத்துலக மருத்துவநல அமைப்பு ” பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை இவ் வைத்தியசாலையில் நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment