இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட தரவரிசையில் களுத்துறை தேசிய பாடசாலையான முஸ்லிம் மத்திய கல்லூரி முன்னனியில் திகழ்ந்துள்ளது.
கடந்த 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியானது (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அந்தவகையில் தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் அஹமட் நிபால் பெற்றுக்கொண்டார். இந்த சர்வதேச மைதானத்தில் அஹமட் நிபால் தனதாக்கிக் கொண்ட இரண்டாவது சிறந்த கோல் காப்பாளருக்கான விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை (தேசிய பாடசாலை) கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உட்பட கல்லூரியின் ஆசிரியர்களும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றது.
0 comments :
Post a Comment