கல்வி மேம்பாட்டு பேரவையினால் இளைஞர் யுவதிகளுக்கு நடாத்தப்பட்ட தலைமைத்துவப் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், ரீ்.சேர்ட் அறிமுகம், கல்வி மேம்பாட்டு பேரவையினால் முன்பள்ளி ஆசிரியா்களுக்கான கைநுால் மூலப்பிரதிகள் கையளிக்கும் வைபவம் 26.03.2022 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெ்ற்றது.
இந் நிகழ்வுகள் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபத் தலைவா் கல்வி ஆலோசகா் மருதுாா் ஹசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளா் நாயகமும் சட்டத்தரணியுமான சம்சுதீன் நியாஸ், கௌரவ அதிதியாக கல்முனை மொட்டுக் கட்சியின் அமைபை்பாளா் மொஹமட் றிஸ்லி முஸ்தபா , கலாநிதி அசீம், வை.எம்.எம்.ஏ பெண்கள் அணியின் தலைவி பவசா தாஹா மற்றும் கல்வி அதிகாரிகள். பேரவையின் உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா்.
0 comments :
Post a Comment