வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்ரகாளிஅம்பாள் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(22) செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.
இம் மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி பெருவிழா நேற்று 21ஆம்திகதி திங்கட்கிழமை வாஸ்துசாந்தி கணபதிஹோமம் உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமாகியது.
கும்பாபிசேக பிரதமகுரு சிவாச்சர்யதிலகம் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் மஹா கும்பாபிசேக கிரியைகள் யாவும் நடைபெற்றுவருகிறந.
எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று 22ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்று தொடர்ந்து நாளை 23ஆம் திகதி புதன்கிழமை 9.51மணி தொடக்கம் 11.03 மணி வரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் மஹாகும்பாபிசேகம் நடைபெறவிருக்கிறது.
0 comments :
Post a Comment