உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் 8ஆவது ஆண்டு சர்வதேச மாநாட்டு நிகழ்வில் 2021 ஆம் ஆண்டுக்கான 'சாதனைத் தமிழன்' விருதினை கலாநிதி வி ஜனகன், தமிழ்நாடு அமைச்சர் கே.ரி. மஸ்தானிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இந்தியாவின் VIT பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி ஜீ. விஸ்வநாதனின் முன்னிலையில் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டது.
உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பானது ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாநாடுகளை நடாத்தி, திறமையான தமிழர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வருகின்றது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாநாடு சென்னையில் சர்வதேச வர்த்தக மண்டபத்தில் (11) இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் உலகத்தில் பல பாகங்களில் இருந்து தமிழ் தலைவர்களும் தமிழ் வர்த்தக பிரமுகர்களும் மற்றும் கல்வியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில், இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடத்துறை சார்ந்த பிரதானிகளும் பங்குபற்றியிருந்தனர்.
கலாநிதி வி. ஜனகனின் பெயரினை 'சாதனைத் தமிழன்' விருதிற்கு உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வக்குமார் பரிந்துரை செய்திருந்தார். இந்நிகழ்வில், இலங்கை உட்பட உகத்தில் பல நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் விருதுகளைப் பெற்றனர் என்பது இங்கு சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில், பல்வேறு கலைநிகழ்வுகளும் ஒன்றுகூடல்களும் இடம்பெற்றன.
இச்செயற்பாட்டை கடந்த 8 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தி, அவர்களின் திறமைகளை பறைசாற்றும் வகையில் விருதுகளையும் கௌரவங்களையும் இந்த அமைப்பு வழங்கி வருகின்றது. மேலும், இச் செயற்பாடு இனிவரும் ஆண்டுகளில் தொடரும் எனவும அமைப்பின் தலைவர் செல்வக்குமார் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment