சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அட்டாளைச்சேனை அல்-சக்கி வரவேற்பு மண்டபத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களது தலைமையில் (20) நடைபெற்றது.
இதில் கட்சியின் செயலாளர் நாயகம் சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தவிசாளர் அப்துல் மஜீட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர பிரதி மேயர் றஹ்மத் மன்சூர், கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் மன்சூர் ஏ.காதிர், கட்சியின் அம்பாரை மாவட்டப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் உட்பட கட்சியின் அம்பாரை மாவட்ட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment