காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது 8 இலச்சம் ரூபா பெறுமதியான 23 கையடக் தொலைபேசி மீட்பு



தாரிக் ஹஸன்-
காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட அக்கரைப்பற்று இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததுடன் 8 இலச்சம் ரூபா பெறுமதியான 23 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த முதலாம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி நிலையம் பூட்டியிருந்த நிலையில் உடைத்து அங்கிருந்த சுமர் 24 இலச்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டது

இது தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் சாஜன் கருணாரத்தின, ஜெசிங்க, அருண் ஆகியார் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணையில் அக்கரைப்பற்றச் சேர்ந்த ஒருவரை 12 கையடக்க தொலைபேசிகளையும்.

இறக்காமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 3 பேரை 11 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்ததையடுத்து 23 கையடக்க தொலைபேசிகளை மீட்டதுடன் 4 பேரை கைது செய்துள்ளதாகவும் பிரதான சூத்திரதாரி தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

இதில்கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :