வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவி அபூதாஹிர் பாத்திமா ரயா 187 புள்ளிகளைப் பெற்று ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தெரிவித்தார்.
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் எமது பாடசாலை மாணவி கோட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வாறு தனது திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment