பகற்போஷண விருந்துபசாரத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் காத்தான்குடி,பாலமுனை, ஒல்லிக்குளம், காங்கயனோடை, பூனொச்சி முனை, மஞ்சந்தொடுவாய் பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான சகோதரிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கொரோனா தொற்றின் காரணமாக பாரிய நிகழ்வுகள் எதனையும் நடாத்த முடியாத சூழல் கடந்த காலங்களில் காணப்பட்டது. இதனால் NFGG மகளிர் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பல வேலைத்திட்டங்களையும் குறித்த காலப்பகுதியில் முன்னெடுப்பதில் சிரமம் காணப்பட்டது. எனினும் தற்பொழுது மகளிர் பிரிவு சகோதரிகள் புதிய உத்வேகத்துடன் செயற்படும் வகையிலும், இவ்வருடத்திற்கான புதிய செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கிலும், புதிய ஆண்டிற்கான திட்டமிடல்களை வகுக்கும் நோக்கிலும் மேற்படி ஒன்றுகூடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர். Dr.ஸாஹிர், பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் ALM.சபீல் நளீமி, மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் சியாட், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் சகோதரி ஜம்ஹுத்நிசா மசூத், சகோதரி பஹ்மியா ஷரீப் , மகளிர் செயற்குழு பொறுப்பாளர் சகோதரி முப்லிஹா பிர்தௌஸ், செயலாளர் நபீசா சபீல், பொருளாளர் ஆயிஷா பைசர் உட்பட மகளிர்பிரிவு சகோதரிகள், செயற்குழு உறுப்பினர்கள் என அனைவருமே சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
கலந்து கொண்ட அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படும் வகையில் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டதுடன் இவ்வருடத்திற்கான திட்டமிடல் நிகழ்வும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment