நாவலாசிரியர் ஜே.வஹாப்தீன், கவிஞர் சொல்லன்பன் நசுறுதீன் ஆகியோர் கௌரவிப்பு



பி.எம்.எம்.ஏ.காதர்-
லுவில் மின்னல் வெளீட்டகம் ஓலுவில் பரண்தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த கலைஞர்கள் ஒன்று கூடல் நிகழ்வும்,கௌரவிப்பும் புதன்கிழமை (16-02-2022)நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிறை வானொலியில் சனிக்கிழமை தோறும் இடம்பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான நேயர்களின் மனதைக் கவர்ந்த சந்தணக்காற்று நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் நாடகத்திற்காக வானொலி தேசிய விருது பெற்ற கவிஞரும்,அறிவிப்பாளரும்,நாவலாசிரியருமான ஆசிரியர் ஜே.வஹாப்தீன்,அண்மையில் கலாபூஸண விருது பெற்ற சிறுகதையாளர் கவிஞர் சொல்லன்பன் நசுறுதீன் ஆகியோருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.எம்.ஐயூப் பொன்னாடை போர்த்தி,நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :