2022 வரவு - செலவுத்திட்டத்திலிருந்து ஒரு லட்சம் வேலைகள் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வு நேற்று (03) நாடளாவிய ரீதியில் இருக்கின்ற சகல கிராம உத்தியோகத்தர்களின் பிரிவுகளிலும் தனித்தனி வேலைத்திட்டங்களாக ஒவ்வொரு கள நிலை உத்தியோகத்தரின் தலைமையில் நடைபெற்றன.
இதில் வரவு - செலவுத்திட்டத்தில் இருந்து இந்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டமானது வாழ்வாதார அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சூழல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி, சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்காக நிதி உதவி வழங்கும் திட்டமாகும்.
சாய்ந்தமருது 07 ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களில் கிராம உத்தியோகத்தர் எம்.என். முஹம்மட் சஜா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எப். றிஸ்பியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று (03) சாய்ந்தமருது 07 ஆம் பிரிவில் பாதை அபிவிருத்தி மற்றும் பகுதி அளவு புனரமைக்கப்பட வேண்டிய வீடு ஒன்றுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வும் இரண்டு உத்தியோகத்தர்களின் தலைமையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment