" ஒரே நாடு, ஓரே நீதி " : அவாதியின் நிராகரிப்பில் பாடம் பயில்வார்களா..?



குவைத் நாட்டை சேர்ந்த அவாதி என்ற 14 வயது சிறுவன், துபாயில் இடம்பெற்ற 50 நாடுகள் பங்குபற்றும் டென்னிஸ் போட்டியில், காலிறுதி போட்டியின் போது, இஸ்ரேல் அணி வீரருடன் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விடயமானது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது. இச் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிவதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. இந் நிராகரிப்பின் மூலம் அச் சிறுவன், தான் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேல் ஒரு அங்கீகரிக்க கூடிய நாடல்ல என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளான்.

அச் சிறுவன் அப் போட்டியில் வென்றிருக்கலாம் அல்லது தோல்வியுற்றிருக்கலாம். அதுவல்ல விடயம். யார் வென்றாலும், தோற்றாலும் இஸ்ரேல் தன்னால் அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதே அச் சிறுவனின் உறுதி. இதுவல்லவா இஸ்லாமிய தாயின் மார்பில் பாலருந்திய சிறுவனின் துணிவு. அற்ப சலுகைகளுக்கு எமது சமூகத்தை அடமானம் வைக்க துணிந்தவர்கள், இந்த சிறுவனின் பாடம் கற்க வேண்டும். இதனை மனதாற பாராட்டும் சிலர், இதனை ஒத்த சில விடயங்களில் எதிர் நிலைப்பாட்டில் உள்ளமையே சுயநலத்தின் வெளிப்பாடாகும்.

" ஒரே நாடு, ஒரே நீதி " செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அல்லாஹ்வை மிக இழிவாக பேசியவர். இவரிடமுள்ள அதிகாரத்திற்கு அஞ்சி, எமது சமூகம் இவரின் காலடிக்கு செல்வது, நாம், எம்மை படைத்த இறைவனை இழிவுபடுத்துவதற்கு ஈடானது. இச் சிறுவனின் செயலை போன்று வெல்வது அல்லது தோற்பது அல்ல விடயம், ஞானசாரவை யார் வேண்டுமாக தலைவராக ஏற்கலாம், அவரின் அல்லாஹ் பற்றிய கூற்றை மீள பெறும் வரை, நாம் எச் சந்தர்ப்பந்திலும், எவ் வகையிலும் ஏற்க கூடாது. அதுவே பிரதான விடயம்.


" ஒரே நாடு, ஒரே நீதி " செயலணி தொடர்பான நேற்றைய அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் செயலாளரது கருத்து ஒரு குழப்பத்தை தோற்றுவித்திருந்தது. அண்மையில் இலங்கையை சேர்ந்த 24 முக்கிய அமைப்புக்கள் சேர்ந்து " ஒரே நாடு, ஒரே நீதி " செயலணி தொடர்பான ஒரு பொது அறிக்கையை மக்களுக்கு வெளியிட்டிருந்தன. இதில் குறித்த செயலணியையே அவ் அமைப்புக்கள் நிராகரித்திருந்தன. இவ் அணியின் முதன்மை அமைப்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவே இருந்தது. இதன் அடிப்படையில் நோக்கினால் இவ்விரு கருத்துக்களும் முற்றிலும் முரணானது. இது தொடர்பான தெளிவொன்றை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வழங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த செயலணியை சந்தித்து பேசுவது தற்போதைய சூழ்நிலைக்கு ஏதுவானது என்பது சிலரது அறிவுரையாகவுள்ளது. எமது சமூகத்தை சேர்ந்த அரசியல், ஆன்மீக ரீதியான சில குழுவினர் ஞானசாரவை சந்தித்து, அவருக்கு தலைமைத்துவ அங்கீகாரத்தை வழங்கிவிட்டனர். இவர்களது அங்கீகாரம் நாமும் அங்கீகாரம் வழங்கியதாக பொருள்படும். நாம் எமது கருத்தை கூறாமல் கூறியதாக கருதப்படும் நிலையில், கருத்தை கூறி பெயரெடுப்பதே பொருத்தமானது என்பது சிலரது நிலைப்பாடாகும். இந் நிலைப்பாட்டை சிலர் ஏற்பதற்கு, ஒன்றுமையின்றி செயற்பட்ட எம்மவர்கள் சிலரே காரணமாகும் என்ற கசப்பான உண்மையை இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஞானசாரவுக்கு இஸ்லாத்தை தெளிவான முறையில் எத்தி வைப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும் எனும் விடயம் மறுப்பதற்கில்லை. அவரது பதவிக்கு அஞ்சி, அவர் அல்லாஹ்வை மிக இழிவாக பேசியதையும் மறந்து, அவரது காலடிக்கு செல்வது எம்மை படைத்த வல்லோனை நாமே இழிவுபடுத்துவதற்கு ஈடானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :