கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இலங்கை திரு நாட்டின் 74வது சுதந்திர தின விழாநிகழ்வுகள் இன்று (04)நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம். ஐ. அப்துல் ரஸாக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் , ரஹ்மத் பவுண்டேசன் சமூக அமைப்பின்ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் பாடசாலைவளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது .
இந் நிகழ்வில் பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்முனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment