இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின சிறப்பு நிகழ்வு இன்று (4) ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில், ஆசிரியர் ஏ.ஜீ.அஸீஸுர் ரஹீமின் நெறிப்படுத்தலில் ஆசிரியர் மற்றும் மாணவர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான எம்.எம்.எம்.ராசிக், ஹபீப் றிபான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு கெடட் படையினரின் மரியாதையுடன் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதில், சட்டத்தரணி ஹபீப் றிபானின் நிதிப்பங்களிப்பில் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment