உள்ளுராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதை எதிர்க்கிறோம்! ஊடகச்சந்திப்பில் அகிலஇலங்கை அரசாங்க பொதுஊழியர்சங்கத்தலைவர்



காரைதீவு நிருபர்-
நாட்டிலுள்ள உள்ளுராட்சிமன்றங்களின் பதவிக்காலத்தை ஒருவருடகாலம் நீடித்தமையை நாம் எதிர்க்கிறோம்.மக்களுடைய வரிப்பணத்தை வீணாக உள்ளுராட்சிமன்ற தலைவர்கள் உறுப்பினர்களுக்கு சம்பளமாக செலவழிப்பதை நாம் ஏற்கவில்லை.உடனடியாக அதனை ரத்துச்செய்து விசேட ஆணையாளரின்கீழ் நிருவாகத்தைக் கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு கல்முனையில் நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் அகிலஇலங்கை அரசாங்க பொதுஊழியர்சங்கத்தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
கடந்த 30வருடகாலமாக எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் நாம் மத்திய மாகாண அரசுகளுடன்பேசி மக்கள்சேவையாற்றி வருகிறோம். மலையகத்தில் தொழிற்சங்கத்தலைவர்களுக்கு எவ்வாறு அரசியல்அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறு வடக்கு கிழக்கில் எங்களை அங்கீகரிக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் தொழிலாளர்களுக்கு பாரிய வெற்றிடம் நிலவுகிறது. வடக்கில் 6322பேருக்கும் ,கிழக்கில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கும் வெற்றிடம் நிலவுகிறது.அதனை நிரப்பவேண்டும்.

வடக்குகிழக்கிலுள்ள உள்ளுராட்சிமன்றங்களில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகிறது. அங்கு கடந்த 5வருடத்திற்கு மேலாக நிரந்தரநியமனமில்லாமல் குறைந்தவேதனத்துடன் பலர் பணியாற்றிவருகிறார்கள்.அவர்களை நிரந்தரமாக்கவேண்டும்.

மேலும் மத்தியஅரசில் 13ஆயிரம் பேரும், மாகாணங்களில் 9ஆயிரம் பேரும் கீழுழைப்பு பட்டதாரிகளாக குறைந்தவேதனத்தில் கடமையாற்றிவருகின்றனர். அவர்களது வேதன அளவை எம்என்4 இலிருந்து எம்என்.5க்கு மாற்றி நிரந்தரமாக்கவேண்டும். என்றார்.

சங்கத்தின் இணைத்தலைவர் ஆ.புண்ணியமூர்த்தி மற்றும் உயர்தொழினுட்ப கணக்கியல் பட்தாரிகள் சங்கபொதுச்செயலாளர் ஹூசைன்முபாறக் ஆகியோரும் கருத்துரைத்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :