கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் டெல்டா வைரசுக்கு எதிராக எதிர் வினையாற்றியது போல் , புதிய திரிபான ஒமீக்ரோன் வைரசுக்கு எதிராக போராட முடியாதென்றும், இதன்காரணமாக, கொரோனா வைரஸ் பிரச்சினை நீண்ட காலம் தொடரும் எனவும் ஒமீக்ரோன் வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை தயாரிப்பதற்கு அதிக மாதங்கள் ஆகலாம், தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளில் அடுத்த வருடத்திலிருந்து சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி வருமென்றும் மொடர்னா நிறுவனத்தின் CEO ஸ்டீபன் வான்செல் ( Stephane Bancel ) தெரிவித்துள்ளார்.
ஒமீக்ரோன் வைரஸ் மீதான அச்சம் உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமீக்ரோன் வைரஸை கவலை அளிக்க கூடிய வைரஸ் வகையாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. பல நாடுகளிலும் ஒமீக்ரோன் வைரஸை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
உலகம் முழுக்க தற்போது 226க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒமீக்ரோன் வைரஸ் பரவியுள்ளது. டெல்டாவை விட இது அதிக ஆபத்து கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒமீக்ரோன் வைரசுக்கு எதிராகத் பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படாது என பைஸர் நிறுவனம் முதலில் கையை விரித்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, UK , கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தென் கொரியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைஸர், மொடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள்தான் அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளன. மொடர்னா நிறுவனத்தின் மொடர்னா MRN தடுப்பூசி அமெரிக்காவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியாகும். இந்நிலையில் மொடர்னா நிறுவனத்தின் CEO தெரிவித்த கருத்து உலகம் பூராகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சர்வதேசப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை மொடர்னா நிறுவனத்தின் அறிவிப்பு ஏற்படுத்தியது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையையும் பாதித்ததோடு, டொலருக்கு எதிரான அவுஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பும் மோசமான சரிவைச் சந்தித்தது.
மொடர்னா நிறுவனத்தின் CEO ஸ்டீபன் வான்செல் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்:-
தடுப்பூசி செலுத்தினாலும் ஒமீக்ரோனிடம் தப்புவது கடினம். ஏனென்றால் ஒமீக்ரோன் வைரசுக்கு எதிராக தடுப்பூசி அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. டெல்டாவிற்கு எதிராக தடுப்பூசிகள் நல்ல எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தது.
அதே எதிர்ப்பு சக்தி ஒமீக்ரோன் வகைக்கு எதிராக இருக்கும் என்று சொல்லவே முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தி பெரியளவில் சரிவை சந்திக்க போகிறது. தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தி எவ்வளவு சரிவை சந்திக்கும் என்பது முழுமையான தகவல் வந்த பின்னரே தெரிய வரும்.
நான் இதுவரை கலந்துரையாடி ய ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இது நல்ல விடயம் கிடையாது. இது நல்லதற்கல்ல என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.
ஒமீக்ரோன் வைரஸில் 50 உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. 32 இடங்களில் புரோட்டின் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக மொடர்னா MRN தடுப்பூசிகள் பெரும்பாலும் ஒமீக்ரோன் வைரசுக்கு எதிராக அதிக எதிர்ப்பு ஆற்றலை கொண்டிருக்காது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ஒமீக்ரோன் வைரஸூக்கு எதிராக தடுப்பூசிகள் எதுவும் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டதாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.
0 comments :
Post a Comment