நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழவினால் பிரதேச செயலகம் தோரும் மத்தியஸ்த சபையின் புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபையின் பதவி வறிதாகுகின்ற உறுப்பினர்களுக்கு பதிலாக மீண்டும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கள் கிழமை மாலை இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற நேர்முக பரீட்சையில் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஆஸாத் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முப்பத்தைந்து பேர் இந் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டதாக பிரதேச செயலாளர் வீ. தவராஜா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment