அரிதான நாகலிங்க மரம் மடத்தடியில் நட்டுவைப்பு!



வி.ரி.சகாதேவராஜா-
லகில் அரிதாக காணப்படுகின்ற நாகலிங்க மரத்தின் கன்று வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் வெள்ளியன்று நட்டுவைக்கப்பட்டது.

ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற மரம்நடும் வைபவத்தில் நிருவாகசபை உறுப்ரினர்களும் கலந்துகொண்டார்கள்.

பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில்,ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இவ் அரிதாக மரத்தை நட்டுவைத்தார்.

நாகலிங்கமரத்தின் மகிமை பற்றி ஆலயபரிபாலனசபைத்தலைவர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அங்கு தெரிவிக்கையில்:

நாகலிங்கம் தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.
இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்படுகின்றன. சிங்கள மொழியில் இது சல் (සල්) என அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் பழம் முற்றி பழுக்க 1 வருடம் முதல் 18 மாதம் வரை கூட ஆகலாம்.

இம்மரத்தின் இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன் டிரிப்டான்ரின் இன்டிகோ இன்டுருபின் ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து பூஞ்சை கிருமியால் தோன்றும் சொறி, சிரங்கு, படர் தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.என்றார்.

மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் மகா குடமுழுக்கு வைபவம் அடுத்தவருடம்; 2022 மார்ச் மாதமளவில் நடைபெறும்.அதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :