சோளம் பயிர்ச்செய்கையில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தி வெற்றிகரமாக சோளம் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு கிழக்கில் பரவலாக நடைபெற்றுவருகிறது.
மண்டூர் விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவின் கணேசபுரம் கிராமத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் குலசிங்கம் கிலசன் தலைமையில் இத்தகைய விழிப்பூட்டல் நிகழ்வொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்டூர் விவசாய போதனாசிரியர் பி.பிரமேந்திரா கணேசபுரம் கமநல அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சோளப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது விவசாய போதனாசிரியர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரால் சோளப்பயிர்ச்செய்கையில் படைப்புழு தாக்கத்தை இனங்காண்பது எவ்வாறு? ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாழ்வது எப்படி போன்ற தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு படைப்புழு தாக்கத்தை எதிர்கொள்வதற்கான புதிய நடுகை முறைமைகள் பற்றியும் பயிற்சியுடன் கூடிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment