நான் அரசியல் ரீதியாக மாற்றப்பட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று தூண்டப்பட்ட போது எனக்கு உலகத்தை பார்ப்பதற்கு நிச்சயமாக புத்தகங்களை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அந்த சந்தர்ப்பத்தில்தான் வாசிப்பின் மூலம் உலகத்தை அறிந்து கொண்டேன் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வாழைச்சேனை – பேத்தாளை பொது நூலகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம் பெற்ற வல்லகி சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
சோசலிசம் என்றால் என்ன அரசியல் என்றால் என்ன மகாத்மா காந்தி என்றால் யார் என்ற தேடலின் போது அது தொடர்பான புத்தகங்களை வாசிக்க தொடங்கியதன் பயனாக எனக்கு அது தொடர்பான அறிவு கிடைத்தது. 2006 தொடக்கம் 2008ம் ஆண்டுவரை அதிகமான புத்தகங்களை மிகவும் கஸ்டப்பட்டு படிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது அதன் தாக்கம்தான் இந்த நூல் நிலையம் உறுவாக காரணமாக அமைந்தது.
நான் மிக சிறந்த நூல்களை வாசித்துள்ளேன் அப்துல் கலாமினுடைய அக்னி சிறகுகள் என்ற நூல் மிகவும் பிரயோசனமான நூல் அந்த புத்தகத்தை படித்தவர்களுக்குத் தெரியும் அவருடன் நெருங்கிப் பழகிய ஒரு என்னத்தை உறுவாக்கும். அதே போன்று வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது எனக்கு நண்பர் ஒருவர் நேரத்தை வீனடிக்காமல் புத்தகங்களை படியுங்கள் என்று ஒரு புத்தகத்தை அன்பளிப்பு செய்திருந்தார் அந்த புத்தகத்தின் பெயர் டொலர் தேசம் என்ற புத்தகம் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து படித்தாலும் அலுப்புத்தட்டாமல் படிக்க்கூடிய பிரயோசனமான புத்தகம் அதனால் சொல்கிறேன் வாசிப்பு ஒரு மனிதனனை நிச்சயம் சிறந்த ஒர் பிரஜையாக மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
எமது பக்கத்து வீட்டுப்பிள்ளைக்கு வெளிநாட்டில் இருப்பவர் போன் ஒன்றை அன்பளிப்பு செய்தால் நமது பிள்ளைக்கும் கடன்பட்டு போன் வாக்கிக்கொடுக்க வேண்டும் என்று என்னுகின்ற பெற்றோர்கள் இப்போது அதிகரித்து காணப்படுகின்றனர் இந்த நிலை எம்மில் இருந்து மாற வேண்டும் பிள்ளைக்கு போன் தேவை எப்போது என்றால் ஆசிரியர் சொல்கின்ற நேரத்தில் சூம் கிளாசுக்கு செல்வதற்கு தேவை அதனை வைத்துக் கொண்டு பிள்ளையும் தாய் மற்றும் தகப்பன் அனைவரும் எந்த நேரமும் போனை வைத்துக் கொண்டு இருந்தால் அதன் விளைவு நிச்சயமாக நன்றாக அமையாது குடும்பம் சீறழியும்.
தெடர்பாடல் தொழில்நுட்பம் கட்டாயம் தேவை தொழில் நுற்பத்தை நாங்கள் இயக்க வேண்டுமே ஒழிய எங்களை தொழில் நுற்பம் இயக்க வெளிக்கிட்டால் நிச்சயமாக குடும்பம் சிதைவடைந்து விடும் என்பதற்கு மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
நாம் ஒவ்வொருவரும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் எமது சமுகத்தையும் எமது பிரதேசத்தையும் நிச்சயம் முன்னேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நுலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், ஊவா பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் ரீ.பிரதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நுலகத்தின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு அதிதிகளால் கேக் வெட்டப்பட்டதுடன் வாசிகசாலையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு வல்லகி என்ற சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன் வாசிகசாலையால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் வாசிகசாலையின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களுக்கும் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment