தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளரின் மறைவு இலகுவில் ஈடு செய்ய முடியாதது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்



தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளரின் மறைவு இலகுவில் ஈடு செய்ய முடியாதது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதி செயலாளர் மைக்கல் செபஸ்டியன் அவர்களின் மறைவு இலகுவில் ஈடு செய்ய முடியாதது. 1965ம் ஆண்டு வி கே வெள்ளையன் தொழிலாளர் தேசிய சங்கத்தினை ஸ்தாபிக்கும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர். அவர் மறைந்த பின்னும் அதே கொள்கையோடு சங்கத்தினை வழிநடத்தியவர்களில் ஒருவர்.

1965ல் இருந்து இன்றுவரை 56 வருடங்கள் சங்கத்தின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் செயற்பட்ட ஒரு சிறந்த நிர்வாகியை இழந்திருக்கின்றோம். பிரதிநிதியாக சங்கத்தில் இணைந்து, உதவி செயலாளர், நிர்வாக செயலாளர் என பதவி வகித்ததோடு கடந்த . 20 வருட காலமாக நிதி செயலாளராக பணியாற்றிய இவர் எங்களுக்கெல்லாம் நல்ல வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். சங்கத்தின் இக்கட்டான நிலைமையில்கூட சங்கத்திற்காகவே உழைத்தவர். அவரின் இழப்பு பெரு வேதனை தருகிறது அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :