பொலிஸ் மா அதிபா, சி.பி.விக்ரமரத்ன திருக்கோவில் பொலிஸ் நிலையத்தாக்குதலில் உயிரிழந்த பாண்டிருப்பைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அழகரெத்தினம் நவீனன்(வயது30) அவர்களின் வீட்டுக்கு நேற்று(26)ஞாயிற்றுக்கிழமை 12.30மணியளவில் விஜயம் செய்தார்.
மரணவீட்டுக்கு சென்ற அவர் இறந்த பொலிஸ் உத்தியோகத்தர் நவீனனின் தாயாரைச்சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த துர்ப்பாக்கிய சம்பவத்தையிட்டு கவலையடைவதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்று கூறி அவருக்கு அடுத்தகட்ட பதவியுயர்வுக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகக்கூறினார்.
நவீனனின் குடும்பத்திற்கு பொலிஸ் திணைக்களம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகக்கூறினார்.
பொலிஸ் மாஅதிபரின் வருகையை யொட்டி காரைதீவு தொடக்கம் கல்முனை பாண்டிருப்பு வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.விசேட அதிரடிப்படையினரும் நின்றிருந்தனர்.
அவர் அங்கு விஜயம் செய்தபோது மரணித்த பொலிசின் பிரேதம் வீட்டுக்கு வந்துசேவில்லை. அம்பாறை வைத்தியசாலையில் பிரேதபரிசோதளை மற்றும் விசாரணைக்காக வைக்கப்படடிருந்தது.
0 comments :
Post a Comment