பிரதம மந்திரி இஸ்லாமிய நாடுகளின் துாதுவா்கள் உயா் ஸ்தாணிகா்களுகிடையே சந்திப்பு



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்லாமிய நாடுகளின் துாதுவா்கள் உயா் ஸ்தாணிகா்களை பிரதம மந்திரி தலைமையில் 30.11.2021 சங்கரில்லா ஹோட்டலில் இராப்போசனமளித்து விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இச் சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சா் பேராசிரியா் ஜி.எல். பீரிஸ், கலந்து கொண்டு இலங்கையின்பொருளாதாரம் மற்றும் கொவிட் 19 பாதிப்பு பற்றி உரை நிகழ்த்தினாாா்.
.
.இதன்போது இங்கு வருகை தந்த துாதுவா்களிடம் இலங்கை கொவிட் 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட துரித செயற்பாட்டுக்கும் மத்தியில் ்வருகை தந்த சகல இஸ்லாமிய துாதுவா்களுடன் பிரதமா் நட்புறவுடன் கலந்துரையாடினாா்.

இஸ்லாமிய நாடுகளுடான இருதரப்பு உறவை தொடா்ந்தும் பேனுவதன் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் செயற் திட்டங்கள் இலங்கை பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்வது தொடா்பில் இதன்போது துாதுவா்களும் இங்கு தத்தது கருத்துக்களைத் தெரிவித்தனா்.

கொவிட் 19 தொற்று நிலைக்கு பல சவால்களை வெற்றி கொண்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்வுவதற்கு தற்போதைய அரசாங்கத்திறகு பங்களிப்பினை செய்வதற்கும் துாதுவா்களுடன் கருத்துப் பரிமாறல் நடைபெற்றது

தொற்று நிலைமைக்கு பல சவால்களை வெற்றி கொண்ட இலங்கையின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு அமைச்சா் ஜி.எல். பீரிஸ் விசேட உரை ஒன்றையும் இங்கு நிகழ்த்தினாா். இதற்காக இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு தொடா்ந்தும் உதவிகள் எதிா்பாா்ப்பதாகவும் அவா் அங்கு தெரிவித்தாா்.
ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கட்டாா், துருக்கி, ஈரான், லிபியா, ஜக்கிய அரபு இராச்சியம், இந்தோனியா, மற்றும் எகிப்து பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளைப் பிரநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை துாதுவா்கள் உயா்ஸ்தாணிகளும் கலந்து கொண்டனா்





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :