சாய்ந்தமருதில், புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டல்!



லக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் புகையிலை, மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபையின் உதவியுடன் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது பொதுச் சுகாதார அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.நியாஸ் அவர்களது வழிகாட்டலில் புகைத்தல் தவிர்ப்பு மக்கள்,மாணவர்களை விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களை மையாமாக வைத்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சிரேஷ்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர் பைஷல் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.


இப்பிராந்தியத்தை ஆட்க்கொண்டு வரும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையின் காரணமாக எதிர்கால சமுதாயம் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல் மற்றும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக, இங்கு சிரேஷ்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர் பைஷல் முஸ்தபாவால் எடுத்துக் கூறப்பட்டது.

புகையிலை உபயோகம் உலகளவில் பொது சுகாதாரத்தில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எந்த போதைப்பொருளும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவைதான். கஞ்சா, அபின் போன்ற பொருட்களுக்கு சட்டரீதியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை.இருந்தாலும் எந்தப் போதை பொருட்களுக்கும் இல்லாத அளவுக்கு புகையிலை தான் அதிகம் கேடு விளைவிக்கிறது.

மார்க்கெட்டில் புகையிலை சிரமமின்றி கிடைப்பது தான் இதற்கு காரணம். போதைப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வருடம்தோறும் 8.2 மில்லியன் மக்கள் மரணம் அடைகின்றனர்.

இதில் 7 மில்லியன் மக்கள் நேரடியாக புகையிலை உபயோகிப்பதன் மூலம் மட்டுமே இறக்க நேரிடுகிறது. மீதம் உள்ள 1.2 மில்லியன் மக்கள் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் நோயின் மூலம் இறக்க நேரிடுகிறது.

புகையிலையானது பல வடி வங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மெல்லும் வகை புகையிலை, நுகரும் வகை புகையிலை, புகைக்கும் வகை புகையிலை, வாயில் மெல்லும் வகை புகையிலையாக ஹன்ஸ், மாவா, வெற்றிலையுடன் புகையிலை ஆகியவற்றை குறிப்பிடலாம். மூக்கின் வழியாக நுகரக்கூடிய புகையிலையாக பொடி. புகை மூலமாக பீடி, சிகரெட், சுருட்டு போன்றவைகளை குறிப்பிடலாம். இதில் எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் உயிர்க்கொல்லியே.
புகையிலையில் 4 ஆயிரம் வகையான நச்சு பொருட்கள் மற்றும் 70 விதமான புற்றுநோயை உருவாக்கும் முதல் தர காரணிகள் அடங்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. புகையிலையினால் புற்றுநோய் மட்டுமின்றி மாரடைப்பு, சுவாச கோளாறுகள், பக்கவாதம், இருமல் போன்ற பல விதமான நோய்கள் ஏற்படுகிறது.

நிகோடின் என்னும் போதைப்பொருள் புகையிலையில் அடங்கியுள்ளது. ஒன்று அல்லது இருமுறை இதை உபயோகித்து பார்த்தாலே போதைக்கு அடிமையாக்கிவிடும் தன்மைகொண்டது. சட்ட ரீதியாக கிடைக்கும் ஒரே ஒரு போதைப்பொருள் புகையிலை மட்டும் தான். பொதுவாக 13 வயதில் தான் இதை ஆரம்பிக்கிறார்கள் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தல், தவறான முன்மாதிரி, இதன் தீய விளைவு தெரியாமல் இதை ஆரம்பிக்கிறார்கள். 55.4 சதவீத புகையிலை உபயோகிக்கும் மக்கள் இதிலிருந்து வெளிவர வேண்டும் என்றே நினைக்கிறார்கள், ஆனால் நிகோடின் ஏற்படுத்தும் அடிமைத்தனத்தால் அவர்களால் எளிதில் அதிலிருந்து வெளிவர முடிவதில்லை. இதிலிருந்து விடுபட வேண்டுமானால், புகையிலை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட வேண்டும்.

மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், புகையிலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை திசை திருப்ப வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள சுய உதவி ஆலோசனையின் மூலம் புகையிலை பழக்கத்திலிருந்து வெளிவர முயற்சிக்கலாம். இதுவும் உதவவில்லை என்றால் அதற்கான வல்லுனர்களை அணுகி அடிமை தனத்திலிருந்து விடைபெறலாம்.

போதைப் பொருளுக்கு அடிமையானால் அது புதை குழிக்கு இழுத்து சென்றுவிடும். மனிதனின் உடல் சார்ந்த உபாதைகளுக்கு அரசு செலவிடும் தொகை அதிகம். இன்றைக்கு தேவைப்படுவது தனி நபரின் மனமாற்றம். தங்களின் எதிர்காலம், சந்ததியினரின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி எடுக்க வேண்டும்.

புகையிலையை தடுக்க வேண்டும் என்றால் அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதாமல் ஒவ்வொருவரும் புகையிலை இல்லா நகரத்தை உருவாக்க நினைக்க வேண்டும். இது ஒரு தனி மனித பிரச்சினை இல்லை. இது ஒரு சமுதாய பிரச்சினை. இவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் வேண்டாம் என்று சொன்னால் யாரும் கொடுக்கப்போவதில்லை. போதைப்பொருள் இல்லாத சமுதாயம் படைக்க அனைவரும் ஓரணியில் நின்று செயல்பட சபதம் ஏற்போம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :