தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ



ஊடகப்பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

திவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலியை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்று 21-12-2021 கொட்டாவ இடைபரிமாற்ற மத்திய நிலையத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. .மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இந்த விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நேஷன் ட்ரஸ்ட் வங்கிக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பின் அடிப்படையில் அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் போது கைகளினால் பணம் செலுத்துவதற்கு பதிலாக( Manual Toll Collection MTC) இந்த Lanka QR நடமாடும் கட்டணப் பயன்பாடு பயன்படுத்தப்படலாம். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது இலங்கை மத்திய வங்கி, லங்கா கியூஆர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றை Frimi மூலம் இணைக்கிறது. இந்த Lanka QR நடமாடும் கொடுப்பனவு செயலியானது தற்போது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் மற்ற அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயன்படுத்தப்படும்.

Lanka QR செயலியைக் கொண்டுள்ள எவரும் இந்த மொபைல் செயலியைப் பயன்படுத்தி, அவர்களின் நெடுஞ்சாலைக் கட்டணத்தை பணம் செலுத்தாமல் செயலியை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், பயணத்தின் தொடக்கத்தில் பயணச்சீட்டை வெளியேறும் வாயிலில் சமர்ப்பித்து, பணம் செலுத்த Lanka QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதுமானது.


இந்த Lanka QR மொபைல் செயலியைப் பயன்படுத்துவது பணப் பயன்பாட்டைக் குறைக்கும், பணப்பயன்பாடு மூலம் கோவிட் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும், சமூகத்தை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்த்தும், மேலும் நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் அலுவலக நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.


இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

வரலாற்றில் டிஜிட்டல் அமைச்சு என்பது பேச்சுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. அந்தக் காலத்தில் அமைச்சு நகைச்சுவை அளிக்கும் நிறுவனமாக மாறியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணித்து திறந்து வைத்ததன் பின்னர் இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 228 மில்லியன் வாகனங்கள் பயணித்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட முன்வருமாறு முகநூலைப் பார்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஆசைப்படும் ஜனாதிபதிகளிடம் , வேண்டுகோள் விடுக்கிறேன்.


நேற்றிரவு முதல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலமாக எண்ணெய் விலையை உயர்த்தப்படவில்லை. இந்த எண்ணெய் விலை உயர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும் போது, ​​மீண்டும் எண்ணெய் விலையை குறைப்போம். உலகளாவிய தொற்றுநோயுடன் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியால் நாம் வெவ்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எண்ணெய் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மீண்டும் வரும்போது, ​​நாடும் அதன் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால்தான் முதலில் மக்களின் உயிரைக் காத்தோம். எண்ணெயால் ஏற்படும் நஷ்டத்தை மக்களுக்கு வழங்காவிட்டால், அந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும். அந்த இழப்பை ஈடுகட்ட மக்கள் மீது அரசு வரி விதிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் வரிச் சுமையை மக்கள்தான் சுமக்க வேண்டும். கட்டி அடித்தாலும் அடித்துக் கட்டினாலும் இரண்டும் ஒன்றுதான். எனவே இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அனுர திஸாநாயக்க தான் கடந்த காலத்தில் பிசாசுகளை உருவாக்கி மீண்டும் இந்த நாட்டை பின்னோக்கி தள்ளினார். பிரபாகரன் வடக்கில் பயங்கரவாதத்தை செயல்படுத்தி இந்த நாட்டை பின்தள்ள வைத்தார். தெற்கில் இருந்த பயங்கரவாதிகள் இணைந்தும் அதனை தான் செய்தார்கள். தமது கடந்த காலத்தை மறந்து தற்போது இந்த நாட்டில் நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றனர். சந்தை நெருக்கடிகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் இந்த நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கு அவர் உறுதுணையாகவும் இருக்க வேண்டும். அவர் தடுப்பூசி வழங்குவதை ஆதரிக்கவில்லை. ஆனால் ரகசியமாகச் சென்று தடுப்பூசி போட்டார். அநுர திஸாநாயக்க தனது ஆதரவாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு கூறவில்லை. அப்படியானால் அவரிடம் எப்படி ஆதரவை எதிர்பார்ப்பது? நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தி தனது கட்சி நிதியை பலப்படுத்த முயற்சிக்கிறார். தான் மாத்திரம் அரசியலால் வாழ்ந்தால் போதும் என்று அநுர திஸாநாயக்க நினைக்கிறார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :