நிந்தவூர் பிரதேச சபையின் 2021 டிசம்பர் மாதத்திற்கான 04 வது சபையின் 45 வது கூட்டமர்வு



பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2021 டிசம்பர் மாதத்திற்கான 04 வது சபையின் 45வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(21) நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமர்வுவின் போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2021 நவம்பர் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2021 நவம்பர் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன.

பின்னர் 2022 ஆம் ஆண்டு செலவினங்களுக்கான முன்னங்கீகாரம் பெறுதல் மற்றும் 2022 ஆம் ஆண்டு முன்பள்ளி பாடசாலைகளை ஆரம்பிப்பது பொதுச்சந்தை தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் சபையில் தவிசாளரினால் கேட்கப்பட்டது.அத்துடன் பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குழுக்கள் அமைத்தல் மற்றும் எமது பகுதி சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சர்வதேச ரீதியில் வெற்றிபெற்றவர்களை கௌரவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

இறுதியாக அஸ்பர் ஜே.பியின் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் கடிதங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை கொரோனா விதிமுறைக்கமைய சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :