ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மாநகர் கட்டக்காடு மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மஜ்மாநகர் கிராமத்தில் அமைந்துள்ள வொன்பிடல் ரேஜ் (Vonfidel Ranch) நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீப் யூசிப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் மரணமடைந்த சப்ரினா யூசிப்பின் நினைவாக சுத்திகர்க்கப்பட்ட இக் குடி நீர் வினியோகத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வொன்பிடல் ரான்ஜ் (Vonfidel Ranch) நிறுவனத்தின் பணிப்பாளரும் ஓய் பெற்ற இராணுவ அதிகாரியுமான ஆலிப் அமீர் (Alfie Ameer) தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர் அஸ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி, மைலம்கரைச்சை மஹிந்தா விகாராதிபதி கடுகஸ்தோட்டை மஹிந்தலங்கார ஹிமி , அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபையின் செயலாளர் அஸ்ஷெய்க் முஹம்மட் அர்க்கம் நூர் அமீத், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எப்.ஜவ்பர், மஜ்மாநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல். சமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக் குடி நீர் திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள நூற்றி ஐம்பது குடும்பங்கள் நன்மை அடைவார்கள் என்று அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல். சமீம் தெரிவித்தார்
இந் நிகழ்வின் நினைவாக அதிதிகலாள் வீதியோரங்களில் மரங்களும் நடப்பட்டது.
0 comments :
Post a Comment