கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா நோய் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் தொழில் இன்றியிருந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் குடும்ப நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மர்ஹும் கலாநிதி நியாஸ் மௌலவி பவுண்டேசானால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றிருந்தது.
கொழும்பு 12 பீர்சாஹிப் ஜீம்ஆப்பள்ளிவாசல் நலன்புரிச் சங்கமும், நியாஸ் மௌலவி பவுண்டேசனும் இணைந்து பவுண்டேசனின் பணிப்பாளர் மௌலவி எல்.எம்.லமீர் ஹாபிழ் (அல்-ஹாசிமி) தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இஹ்ஸானியா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஹுஸைன் (தீனி) , கொமும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ரி.எம்.இக்பால்,வாழைத் தோட்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிபாரி, தனவந்தர்கள், நற்பணிமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மூவினத்தையும் சேர்ந்த சுமார் 150 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக மேலும் 200 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பவுண்டேசனின் சேவைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தவர்கள் மற்றும் ஊடகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கும் அவர்களின் உதவிகளுக்கான அதிதிகளால் சேவை நலன் நற்சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கொரோனா கலாத்திலும் பவுண்டேசனின் பல்வேறுபட்ட இலவச சமுக சேவை உதவிகளை ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளர் சத்தார் எம் ஜாவித்துக்கும் விஷேட நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment