கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தில் ஶ்ரீ வேம்படி விநாயகர் ஆலயத்திற்கு மிகநீண்டகாலமாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினை தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. ஆர். செலஸ்தினா அவர்கள் ஊடாக ஆலய நிர்வாகத்தினர் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பிடம் நிவர்த்திசெய்து தருமாறு வேண்டி இருந்தனர்.
இதற்கமைய ஶ்ரீ வேம்படி விநாகயர் ஆலயத்தின் வேண்டுகோளுக்கிணங்க அக்கோரிக்கையினை ரஹ்மத்பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள்ஏற்றுக்கொண்டு மிகவும் குறுகிய நாட்களுக்குள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பொதுக்கிணற்றினை அமைத்து உத்தியோகபூர்வமாகபொதுமக்கள் பாவனைக்காக கையளித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலய நிரவாகத்தினர்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ. ஆர்.செலஸ்தினா, கணபதிப்பிள்ளை புவனேஷ்வரி,பொது மக்கள் ,ரஹ்மத் பவுண்டேசனின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இறுதியாக ரஹ்மத் மன்சூர் அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது இப்படியான நல்லிணக்கசெயற்பாட்டினை எமது பிரதேசத்திற்கு செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து செயல்பட்டு வரும்YWMA நிறுவனத்துக்கு தனது விஷேட நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
0 comments :
Post a Comment