பிரதேச மட்ட இளைஞர் தொண்டர்களுக்கான அனர்த்த நிலையின் போது மேற்கொள்ள வேண்டியமுன்னாயத்த நிலை தொடர்பில் கலந்துரையாடல்



எம். என். எம். அப்ராஸ்-
ம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம். ஏ. சி. எம் . ரியாஸ் அவர்களின்வழிகாட்டலில் கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டம் தாயரித்தல் திட்டத்தின் கீழ் பிரதேச மட்டஇளைஞர் தொண்டர்களுக்கான அனர்த்த நிலையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நிலைதொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிரதேச
செயலகத்தில் (01) இன்று இடம்பெற்றது

பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் அனர்த்த நிலையின் போது பிரதேச மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு
கிராமிய திட்ட வரைபு செய்வது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும், அனர்த்த நிலையின் போது
கிராம மட்டத்தில் பாதிக்கப் படக் கூடிய பகுதிகளை இனங்கானல் ,பிரதேச ரீதியாக அமைக்கப் பட்ட குழுக்கள்(அனர்த்த முகாமைத்துவ குழு மீட்புக் குழு , நிவாரணக்குழு ) பற்றியும் மற்றும் அனர்த்த நிலையின் போது பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது மற்றும் அறிவுறுத்தல்கள் மேற் கொள்வதுபற்றியும் , தொடர்பாடல் திறன், காலநிலை மற்றும் அனர்த்த நிலையின் போது முன்னெச்சரிக்கை விடயங்களைஎவ்வாறு
பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேவையான முன்னாயத்த விடயங்கள் தொடர்பில் பிரதேச மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது .
கல்முனை பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களான றாசிக் நபாயிஸ் ,என். எம் . பஸ்மிலா ஆகியோர்
கலந்து கொண்டு பிரதேச மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :