மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11உள்ளுராட்சி மன்றங்களில் பல வருடகாமாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் தங்களது நியமனங்களை நிரந்தர நியமனமாக்கி தருமாறு இன்று தத்தமது அலுவலகங்கள் முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் ஏறாவூர் நகரசபையின் தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் 66ஊழியர்களும் தங்களுக்குரிய நியமனத்தை நிரந்தர நியமனமாக்க கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு நகரசபையின் கௌரவ தவிசாளர் மற்றும் கௌரவ உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதன்போது சபையின் தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளர், மற்றும் சபையின் முன்னாள் தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் நிரந்தர நியமனம்கோரி முன்வைத்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சார்பாக குறித்த அதிகாரிகளிடம் கலந்துரையாடி வருகின்றதையும்.,நிரந்தர நியமனத்தை அரசு துரிதகெதியில் வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment