கோதுமை மா தட்டுப்பாட்டால் பிஸ்கெட்டுக்கு தட்டுப்பாடு?



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாட்டில் பிஸ்கட் வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் S.M.D சூரியகுமார தெரிவித்துள்ளார்.
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி 20% வீழ்ச்சியடைந்துள்ளது.
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக பிஸ்கட் உள்ளிட்ட இனிப்புப் பண்ட உற்பத்தியின் கேள்வியில் 75% - 80% வரையிலேயே நிரம்பல் செய்ய முடிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மாதமொன்றுக்கு 12,000 முதல் 15,000 தொன் கோதுமை மா பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை அண்மைய நாட்களில் 41% உயர்வடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் விலை உயர்த்தப்பட்டால் பிஸ்கட், கேக் உள்ளிட்ட பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என சூரியகுமார தெரிவித்துள்ளார்.

கோதுமை மா தட்டுபாடு காரணமாக உற்பத்தியை குறைக்க நேரிடும் எனவும், இதனால் பணியாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுமெனவும் ,கோதுமை மா மட்டுமன்றி சீனி, மாஜரின் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :