காரைதீவில் 60வயதுக்குமேற்பட்டோருக்கு பூஸ்டர் கொரோனா தடுப்பூசி !



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் வாழும், 60வயதுக்கு மேற்பட்ட ஆண்பெண் இருபாலாருக்கும் கொரோனா 3வது பூஸ்டர் தடுப்பூசியாக "பைசர்" தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகிறது.
முதலிரண்டு தடுப்பூசிகளை ஏற்றி 3மாதம் கடந்தவர்களுக்கே இப் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலன குழுவினர் கடந்த 3தினங்களாக சுமார் 650பேருக்கு தடுப்பூசிகளை ஏற்றியுள்ளனர்.

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய இடங்களிலும் இச்செயற்பாடு நடைபெற்றது.

"எனினும் முதலிரண்டு தடுப்பூசியைப்பெறுவதில மக்கள் காட்டிய ஆர்வம் இந்த 3வது பூஸ்டர் ஊசிஏற்றுவதில் போதுமானளவு இல்லை. அதனால் நாம் ஒலிபெருக்கிமூலம் கிராமங்களில் விழிப்புணர்வுசெய்யநேரிட்டது "என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :